Sunday, September 8, 2024
Home » காட்டு யானைகளின் தாக்குதலால் வீடொன்றுக்கு பலத்த சேதம்

காட்டு யானைகளின் தாக்குதலால் வீடொன்றுக்கு பலத்த சேதம்

by Prashahini
February 12, 2024 6:11 pm 0 comment

மட்டக்களப்பு ஆயத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை கிராமத்தில் இன்று (12) அதிகாலையின் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டமான குடும்பமொன்றின் வீடு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த வேளையில் அதிகாலை 5.00 மணியளவில் உன்னிச்சை கிராமத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடொன்றை மிக மோசமாக தாக்கியுள்ளதால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே அருகிலிருந்த அயலவர்களும் சத்தமிட்டதனை தொடர்ந்து காட்டு யானைகள் இரண்டும் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக உன்னிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் தொடர்ச்சியாக சேதம் ஏற்பட்டு வருவதாகவும், இது விடயமாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x