Monday, April 29, 2024
Home » SLvAFG: பெத்துமின் இரட்டை சதத்துடன் இலங்கை இமாலய ஓட்டம் 381/3

SLvAFG: பெத்துமின் இரட்டை சதத்துடன் இலங்கை இமாலய ஓட்டம் 381/3

- பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 210*

by Rizwan Segu Mohideen
February 9, 2024 6:36 pm 0 comment

– 12 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட அவிஷ்க பெனாண்டோ
– 5 ஓட்டங்களால் அரைச் சதத்தை தவறவிட்ட சதீர சமரவிக்ரம

கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை அணி 300 ஓட்டங்களை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பெற முடிந்தது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 381 ஓட்டங்களை பெற்றது.

SLvAFG: பெத்தும் நிஸ்ஸங்க சாதனை; இரட்டைச் சதம் கடந்த முதல் இலங்கை வீரர்

இரட்டைச் சதம் கடந்த பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 210* (139) ஓட்டங்களை பெற்றதோடு, 12 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட அவிஷ்க பெனாண்டோ 88 (88) ஓட்டங்களையும், 5 ஓட்டங்களால் அரைச் சதத்தை தவறவிட்ட சதீர சமரவிக்ரம 45 (36) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில், பரீத் அஹமட் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அந்த வகையில், 382 ஓட்டங்கள் எனும் இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Sri Lanka  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
not out 210 139 221 20 8 151.07
c Ibrahim Zadran b Fareed Ahmad 88 88 111 8 3 100.00
c Gulbadin Naib b Mohammad Nabi 16 31 34 1 0 51.61
c Azmatullah Omarzai b Fareed Ahmad 45 36 58 4 1 125.00
not out 7 8 13 0 0 87.50
Extras (lb 3, nb 2, w 10) 15
TOTAL 50 Ov (RR: 7.62) 381/3

Did not bat: 

Fall of wickets: 1-182 (Avishka Fernando, 26.2 ov), 2-225 (Kusal Mendis, 35.2 ov), 3-345 (Sadeera Samarawickrama, 47.1 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
9 0 77 0 8.55 23 10 2 1 1
6 0 55 0 9.16 15 7 1 4 0
9 1 79 2 8.77 21 7 3 3 1
8 0 61 0 7.62 15 3 3 0 0
8 0 62 0 7.75 17 3 3 1 0
10 0 44 1 4.40 27 3 0 1 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT