இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்து சுமார் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்திDrug வருகின்றனர்.
மன்னார் குறூப் நிருபர்