Sunday, April 28, 2024
Home » கன்னி டெஸ்டில் ஆடும் சாமிக்க குணசேகரவுக்கு பதில் கசுன் ராஜித

கன்னி டெஸ்டில் ஆடும் சாமிக்க குணசேகரவுக்கு பதில் கசுன் ராஜித

by Rizwan Segu Mohideen
February 5, 2024 7:28 am 0 comment

துடுப்பெடுத்தாடும்போது தலைக் கவசதில் பந்து பட்ட கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடும் வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க குணசேகரவுக்கு பதில் மாற்று வீரராக கசுன் ராஜித அழைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (04) முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்காக குணசேகர 16 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே நவீட் சத்ரானின் பௌன்ஸர் பந்துக்கு காயத்திற்கு உள்ளானார்.

இதனை அடுத்து மாற்று வீரராக அழைக்கப்பட்ட கசுன் ராஜித்த நேற்று ஆப்கானிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவச்சை ஆரம்பித்தார்.

தலையில் பந்து பட்டதை அடுத்து குணசேகர மருத்துவமனைக்கு மேலதிக சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT