Saturday, May 4, 2024
Home » பாதுகாப்புச் சபை குறித்து பொதுச் சபையில் கவலை

பாதுகாப்புச் சபை குறித்து பொதுச் சபையில் கவலை

by Gayan Abeykoon
February 1, 2024 5:04 pm 0 comment

உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவவும் ஆதரவளிக்கவும் தேவையான முடிவுகளை எடுக்க முடியாத இயலாமையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்சபையின் 78ஆவது அமர்வுத் தலைவர் டென்னிஸ் பிரான்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அதேநேரம், பாதுகாப்புச் சபையில் புவிசார் அரசியல் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதால் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கப்பெறாமை குறித்து கவலை தெரிவித்ததோடு இந்தச் சபை இந்தியாவுக்கு நிரந்தர அங்கத்துவம் கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியம் குறித்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெறும் முயற்சியில் இந்தியா நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT