Wednesday, May 15, 2024
Home » டிஜிட்டல் உருமாற்றத்திற்கு தயாராகிறது Dialog Innovation Challenge

டிஜிட்டல் உருமாற்றத்திற்கு தயாராகிறது Dialog Innovation Challenge

by Gayan Abeykoon
February 1, 2024 10:10 am 0 comment

நாடளாவிய ரீதியில் இருந்து வந்த 1200இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களால் அமோக வரவேற்பை பெற்றுள் ளது. இது இந்த தேசிய முன்னெடுப்பின் மீதுள்ள வலுவான ஈடுப்பாட்டை காட்டுகிறது. இம்முன்னெடுப்பு டிஜிட்டல் மாற்றத்திற்கு வளமூட்டி நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் மூலம் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்  மற்றும் பொது மக்கள் என வெவ்வேறு வயதுப்பிரிவில் வெவ்வேறு விதமான போட்டியாளர்களுடன் 1279 விண்ணப்பங்களைஇந்த சவால் பெற்றுக்கொண்டது.

இந்த சவாலானது தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் மக்களின்வா ழ்வை மேம்படுத்த ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, machine learning, IoT, blockchain போன்றவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் எந்த நிலையில் இருந்தாலும் அவை

வரவேற்கப்பட்டன. பதிவுகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட

விண்ணப்பதாரிகளின் பெயர்கள்  பெப்ரவரி ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கேற்பாளர்களுக்கு ரூ.5 மில்லியன் பெறுமதியான பரிசுக்குவியலில் இருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்புண்டு.

அதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமது திட்டங்களை செயற்படுத்த டயலொக் புத்தாக்குனர் நிதிய, முதலீட்டு நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாய் நிதியை கோர முடிவதுடன் டயலொக்கின் பரந்துபட்ட ஆக்கபூர்வ சூழலமைப்பிலிருந்து விலைமதிப்பற்ற பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை பெறும் வாய்ப்பும் கிட்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT