செவ்ரோன் லூப்ரிகன்ஸ் பிஎல்சீ ஒரு புதிய செயல்பாட்டின் மூலம் இலங்கையின் மசகு எண்ணெய் தொழில் துறையில் அதன் தனித்துவ உற்பத்திபற்றி பெருமையுடன் அறிவிக்கிறது. கோல்டெக்ஸ் ஹெவோலைனின் 10 ஆயிரம் கிலோ மீற்றர்களை அடையும் இந்த செயல்பாடானது அதன் ப்ரோ டிஎஸ் முழுமையான செயற்கை தொடரின் ஒரு மைல்கல்லாகும்.
இந்த அரிய செயல்பாட்டின் ஆதாரம் அண்மையில் ஒரு செய்தியாளர் மாநாட்டின் போது பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. உள்ளூர் சுற்றுச்சூழல் நிபந்தனை களுக்கு ஏற்ப ஒரு ஒற்றை வடிகாலை பயன்படுத்தி இலங்கையில் 10.000 கிலோமீட்டரை அடையலாம் என்னும் கூற்று செயல்வடிவம் பெற்றுள்ளது.
கோல்டெக்ஸ் ஹெவோ லைனின் இந்த அரிய சாதனையானது இலங்கையருக்கு உயர்தர இயந்திர லூப்ரிகன்களை வழங்குவதோடு பயணிகள் வாகன மோட்டார் எண்ணெய் பிரிவுக்கு வழங்குகிறது .
இந்த செயல்பாட்டின் விரிவான சான்று நுகர்வோரின் தனித்துவமிக்க கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் கோல்டெக்ஸின் உறுதிப்பாடாகும்.
கோல்டெக்ஸ் ஹவோலைனின் இந்த ப்ரோ டிஎஸ் முழுமையான செயற்கை சுற்றுச்சூழல் தொடர்கள் உள் எரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஹைபிரிட் பயணிகள் வாகனங்கள் இரண்டுக்கும் பொருத்தமானது.
இந்த சோதனைமூலம் தெரிவது சூழல் நிலைமைகளை ஆராய்ந்து இவ்வாறு நிரூபனம் செய்யும் ஒரே நிறுவனம் செவ்ரோன் லூப்ரிகன்ஸ் என்பதாகும்.
இந்த அணுகுமுறையானது குறிப்பிடத்தக்கது ஏனெனில் கோல்டெக்ஸ் ஹவோலைன் முன்னாள் இலங்கை கிரிக்கெட் கெப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான மஹேல ஜயவர்தனவுடன் இணைந்து செயல்படுவதும் ஒரு காரணமாகும்.செய்தியாளர் மாநாட்டின்போது அவர் இலங்கையின் கோல்டெக்ஸ் நிறுவன உத்தியோகபூர்வ பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.