பண்டாரகம அட்டுலுகம அல் கஸ்ஸாலி மு. மகா வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் கற்கவுள்ள மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் (school bag, water bottles) வழங்கும் நிகழ்வும் பெற்றோர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் நிகழ்வும் அல்கஸ்ஸாலி கேட்போர் கூடத்தில் ஆரம்ப வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜொலிபர் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.
அட்டுலுகம குருந்துவத்த யுனிக் டிரேடிங் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
களுத்துறை கல்வி வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.என். முஹம்மத் விஷேட உரை நிகழ்த்தினார். அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் தலைவர் எம். அறூஸ், அட்டுலுகம காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் நிர்வாக தலைவர் அப்துல் காதர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்