Sunday, April 28, 2024
Home » நல்லாட்சியில் பிரதமர் ரணிலை பதவி நீக்கிய மனு மீதான விசாரணை

நல்லாட்சியில் பிரதமர் ரணிலை பதவி நீக்கிய மனு மீதான விசாரணை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பாணை

by mahesh
January 31, 2024 10:45 am 0 comment

நல்லாட்சி அரசாங்க காலத்தில் பிரதமர் பதவியை வகித்த தற்போதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியிலிருந்து விலக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ,சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018இல், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியதற்கு எதிராக இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அடிப்படை மனித உரிமை மனு மீதான விசாரணையை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியளிக்குமாறு அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT