Sunday, May 5, 2024
Home » அநுராதபுரத்தில்; உலக உணவுத் திட்டத்தின் புதிய காரியாலயம்

அநுராதபுரத்தில்; உலக உணவுத் திட்டத்தின் புதிய காரியாலயம்

by Gayan Abeykoon
January 25, 2024 8:22 am 0 comment

நுராதபுர மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உலக உணவுத்திட்டத்தின் புதிய அலுவலக காரியாலயமொன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு அநுராதபுரம் மாவட்ட அரச அதிபர் ஜனக்க ஜயசுந்தரவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் மேற்படி உலக உணவுத்திட்டத்தின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னரை விடவும் உலக உணவுத்திட்டத்தின் வேலைத்திட்டங்களை செயற்திறன் மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டுமென்ற முக்கிய நோக்கத்திற்காக வேண்டியே உலக உணவுத் திட்டத்தின் புதிய அலுவலகம் அரச அதிபர் அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலை உணவு வேலைத்திட்டம் மற்றும் முட்டைக்காக வேண்டி கோழி வளர்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களுக்கு இதன் மூலம் வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சந்தியா என்.ஜீ. அபேசேகர, அநுராதபுரம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயனானந்த உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(அநுராதபுரம் தினகரன் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT