Sunday, April 28, 2024
Home » மத சுதந்திரத்திற்கு உலகெங்கும் சவால்

மத சுதந்திரத்திற்கு உலகெங்கும் சவால்

by gayan
January 18, 2024 6:13 pm 0 comment

உலகளாவிய ரீதியில் மத சுதந்திரம் சவால்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரம் கட்டமைப்பு ரீதியாகவும் முறையாகவும் சவால்களுக்கு உள்ளாவது ஆழமாக வேரூன்றியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தை அமெரிக்க கொங்கிரஸ் 1998 இல் நிறைவேற்றியது. அன்றிலிருந்து மத மற்றும் நம்பிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாத்து முன்னேற்றுவது அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.

மத சிறுபான்மை சமூகங்கள் மீதும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்படல், வகுப்புவாத வன்முறை மற்றும் அமைதியான வெளிப்பாட்டிற்காக நீண்டகால சிறைத் தண்டனை அளித்தல், நாடுகடந்த அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற. மத சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கங்கள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT