Sunday, May 5, 2024
Home » காசாவில் தினசரி உயிரிழப்பு 21ஆம் நுற்றாண்டில் அதிகம்

காசாவில் தினசரி உயிரிழப்பு 21ஆம் நுற்றாண்டில் அதிகம்

by gayan
January 13, 2024 2:19 pm 0 comment

காசாவில் தினசரி சராசரியாக 250 பேர் கொல்லப்படும் நிலையில் அங்கு 21 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற எந்த ஒரு போரை விடவும் தினசரி உயிரிழப்பு அதிகமாக உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் மூன்று மாதங்களை தாண்டி நடத்தும் தாக்குதல்களில் 23,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஒக்ஸ்பாம் நேற்று முன்தினம் (11) வெளியிட்ட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

நூற்றாண்டின் ஆரம்பம் தொடக்கம் மற்ற மோதல்களில் தினசரி கொல்லப்படுவோர் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நாளொன்றுக்கு சராசரியாக சிரியாவில் 96.5, சூடானில் 51.6, ஈராக்கில் 50.8, உக்ரைனில் 43.9, ஆப்கானிஸ்தானில் 29.8, யெமனில் 15.8 பேர் பலியாகியுள்ளனர்.

வாரத்துக்குத் தேவையான உணவு உதவியில் 10 வீதமானது மாதத்திரமே கிடைக்கப்பெறும் நிலையில் காசாவுக்குள் உதவிகள் செல்வதை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது மேலும் அழிவை ஏற்படுத்தி வருவதாக ஒக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT