Tuesday, May 7, 2024
Home » எம்.பியான ஷகீப் புதிய சர்ச்சையில்

எம்.பியான ஷகீப் புதிய சர்ச்சையில்

by damith
January 9, 2024 8:41 am 0 comment

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அந்நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் வெற்றிபெற்றுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்த இந்தத் தேர்தலில் ஆளும் அவாமி கட்சி சார்பில் மகுரா தொகுதியில் போட்டியிட்ட 36 வயதான ஷகீப் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

எனினும் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கும் அவர் இரசிகர் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று பிரபலம் அடைந்துள்ளது. ஷகீப் அல் ஹசனை கூட்டம் சூழ்ந்துகொண்ட நிலையில் திடீரென்று பின்னால் திரும்பிய அவர் பின்னால் இருந்து ஒருவர் மீது கண்ணத்தில் அறைவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவரது செயலுக்குக் காரணம் என்னவென்று உறுதி செய்யப்படாதபோதும் கூட்டத்தினரின் நடத்தை அவரது கோபத்தை தூண்டி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சகலதுறை வீரரான ஷகீப் அல் ஹசன் பொதுவெளியிலும் மைதானத்திலும் மோசமான நடத்தையை வெளிப்படுத்தி பல சந்தர்ப்பங்களில் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT