Sunday, April 28, 2024
Home » கொழும்பில் “FACETS Sri Lanka” கண்காட்சி; உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை ஏற்பாட்டில்

கொழும்பில் “FACETS Sri Lanka” கண்காட்சி; உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு

பிரதம அதிதியாக அமைச்சர் ரமேஷ் பத்திரன

by damith
January 8, 2024 10:51 am 0 comment

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து, ஆசியாவின் முதன்மையான 30ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இன் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை (06) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி , தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் விராஜ் டி சில்வா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் கலாநிதி கிங்ஸ்லி பெர்னார்ட், SLGJA தலைவர் அஜ்வர்ட் டீன் மற்றும் FACETS ஸ்ரீலங்கா தலைவர் அல்தாப் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FACETS Sri Lanka இன் 30வது பதிப்பு, இலங்கையின் ரத்தினம் மற்றும் நகை மரபுகளை உள்ளடக்கிய பல பெவிலியன்களைக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் Gem Pavilion, Premier Jewellery Pavilion, Sustainable Pavilion, Sapphire Masterpiece Pavilion, NGJA SME Pavilion, and the SLGJA Pavilion, ஆகியவை ஒவ்வொன்றும் இலங்கை வழங்கும் உன்னதமான கற்கள் மற்றும் நகைகள் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இந் திறப்பு விழாவில் மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பிரேசில் போன்ற வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வியாபாரிகள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி இன்று (8) நிறைவு பெறவுள்ளது.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT