இன்று (01) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய,
- 12.5kg சிலிண்டர்: ரூ. 755 இனால் அதிகரிப்பு
- 5kg சிலிண்டர்: ரூ. 305 இனால் அதிகரிப்பு
அதன் அடிப்படையில்,
- 12.5kg: ரூ. 3,985 இலிருந்து ரூ. 4,740 ஆக ரூ. 755 இனால் அதிகரிப்பு
- 5kg: ரூ. 1,595 இலிருந்து ரூ. 1,900 ஆக ரூ. 305 இனால் அதிகரிப்பு
லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.
- 12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு
- 5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய,
12.5kg: ரூ.685 இனால் அதிகரிப்பு – ரூ. 4,250
5kg: ரூ.276 இனால் அதிகரிப்பு – ரூ.1,707
2.3kg: ரூ.127 இனால் அதிகரிப்பு – ரூ.795
இன்று முதல் 15% இலிருந்து 18%ஆக அதிகரிக்கும் 3% VAT அதிகரிப்பு காரணமாக குறித்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை; நிறுவனங்கள் அறிவிப்பு