542
புகையிரதமொன்று தடம் புரண்டதால் மலையக பாதையிலான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமொன்று தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக, இலங்கை புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக பாதையிலான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதத்தை சீரமைத்து புகையிரத போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.