Monday, April 29, 2024
Home » நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்

- இலங்கையின் மன்னாரில் பிறந்தவர்

by Rizwan Segu Mohideen
December 25, 2023 12:06 pm 0 comment

தமிழ்த்திரையுலகின் ஜனரஞ்சக நகைச்சுவை நடிகர் போண்டாமணி நேற்று (24.12.2023) தனது 60 ஆவது வயதில் காலமானார்.

175 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். போண்டாமணியின் இயற்பெயர் பெயர் கேதீஸ்வரன். இவர் இலங்கை, மன்னாரில் பிறந்தவர். இவருடன் பிறந்த 16 சகோதரர்களில் 8 பேர் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் காலமாகி விட்டார்கள்.

எம். மாரிமுத்து செட்டியார்_- மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963 இல் பிறந்தார். மன்னாரில் ‘மறுமலர்ச்சி விநாயகர் கலாமன்றம்’ என்ற பெயரில் மன்றமொன்றைத் தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இலங்கையிலிருந்து அகதியாக இராமேஷ்வரம் சென்று பல முயற்சிகளுக்குப் பின்னர் நடிகரானார். நடிகர் வடிவேல் இவருக்கு அதிக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். பூவே பூச்சூடவா (2017), எங்க வீட்டு மீனாட்சி (2022) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி 2023 டிசம்பர் 24 அன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் காலமானார்.

எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ்
கம்பளை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT