Thursday, June 20, 2024
Home » TOP 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல்; ஷாருக்கான் முதலிடம்

TOP 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல்; ஷாருக்கான் முதலிடம்

- 8ஆவது இடத்தில் விஜய்

by Prashahini
December 18, 2023 3:04 pm 0 comment

பிரபல லண்டன் வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’-ல் 2023 ஆம் ஆண்டின் ஆசிய பிரபலங்களின் TOP 50 பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பதான், ஜவான் என அடுத்தடுத்து 2 திரைப்படங்களின் மாபெரும் வெற்றியும், அதன் மூலம் பாலிவுட் திரைத்துறையின் உத்வேகத்தை அதிகப்படுத்தியதும் ஷாருக்கான் முதல் இடம் பிடிப்பதற்கான காரணங்களாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் நடிகை ஆலியா பட் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ‘தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான ஆலியா பட், வெளிநாட்டு ரசிகர்களையும் குவித்திருந்தார். நடப்பாண்டில் ‘சிட்டடெல்’, ‘லவ் அகெய்ன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் பஞ்சாப் திரை நட்சத்திரம் தில்ஜித் தோசன்ஜ் 4ஆவது இடமும், பாடகி சார்லி XCX 5ஆவது இடமும் பிடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 6ஆவது இடம் பிடித்துள்ளார். 7ஆவது இடத்தில் பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளார்.

8ஆவது இடத்தில் நடிகர் விஜய் உள்ளார். முதல் 10 இடங்களில் இடம்பெற்றவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் விஜய் மட்டுமே. அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் வஹாஜ் அலி 9ஆவது இடமும், ‘தி மார்வல்ஸ்’ படத்தில் நடித்த இமான் வெள்ளனி 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்த TOP 50 பட்டியலில், அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT