Friday, June 21, 2024
Home » இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் Softlogic IT

இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் Softlogic IT

by Rizwan Segu Mohideen
December 14, 2023 11:37 am 0 comment

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (FITIS), இலங்கையில் இரண்டாவது முறையாக கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் நடத்திய 2023 API ஆசிய மாநாட்டின் பெருமைமிக்க கோல்ட் அனுசரணையாளராக (Gold Sponsor), Softlogic IT இணைந்திருந்தது. இந்த மாநாடு, AI, FinTech, Smart cities ஆகிய துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்களின் கூட்டு முயற்சிகளை துரிதப்படுத்தி, டிஜிட்டல் ரீதியில் வலுவாக்கப்பட்ட இலங்கையை உருவாக்குவதன் மூலம் ICT துறையை மாற்றமுறச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முறை இம்மாநாட்டின் கருப்பொருள் ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துதல்’ (Fuelling the Digital Economy) ஆகும்.

இம்மாநாட்டில், தொழில்துறை மற்றும் வணிகங்களிலுள்ள தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 500 இற்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் பங்கேற்றிருந்தனர். டிஜிட்டல் மாற்றம் மூலம், பெருகி வரும் போட்டிச் சந்தையில் தமது நிறுவனங்களை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பான பெறுமதியான தகவல்களையே அவர்கள் இங்கு ஆராய்ந்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, Softlogic IT இன் பங்குதாரர் நிறுவனமான Austria Card ஐச் சேர்ந்த Dr. Mike Kivi, திறந்த சூழல் தொகுதி மூலம் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய முக்கிய உரையை நிகழ்த்தினார். ஸ்மார்ட் நகரங்களின் பாதையில் தகவல் முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஆளுகை மற்றும் மக்கள் ஈடுபாடு தொடர்பான முக்கிய உரையை, அவுஸ்திரேலிய நிறுவனமான iOmniscient நிறுவனத்தின் இந்தியா மற்றும் இலங்கைக்கான வணிகத் தலைவர் Clarissa Hayward வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய Dr. Mike Kivi, “இன்றைய காலகட்டத்தில், நிதித் தொழில்நுட்பம் அல்லது Fintech ஆனது, பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புத்தாக்கமான தீர்வுகளின் வரிசையுடன் வளர்ந்துள்ளது. நிதிப் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்தும் கையடக்கத்தொலைபேசி கட்டண தளங்கள் முதல் முதலீட்டு உத்திகளை எளிதாக்கும் தன்னியக்க ஆலோசகர்கள் வரை FinTech பல்வேறு வகையான சேவைகளை வழங்குகிறது. Fintech ஆனது அதிக நிதி உள்ளீர்ப்பை அனுமதிப்பதால் இலங்கை போன்ற வளர்ந்து வரும் சந்தைகள் இதன் மூலம் பாரிய பயனைப் பெறலாம்.” என்றார்.

இது தவிர, Softlogic IT ஆனது ஸ்மார்ட் நகரங்களுக்கான பிரதான வழி அனுசரணையாளராகவும் இம்மாநாட்டில் பங்கேற்றது. நாட்டின் டிஜிட்டல் பொருளாதார இலக்கை நோக்கி நிலைபேறான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்த, AI, IoT ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஸ்மார்ட் நகரங்களின் திறனை நகர்ப்புற பரிணாம வளர்ச்சியைச் சூழ்ந்து காணப்படும் எமது திறன்கள் வெளிப்படுத்துகின்றன. Softlogic ஆனது iOmniscient உடன் இணைந்து, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கு புத்தாக்கமான அணுகுமுறையை அறிமுகப்படுத்தி, அதில் வாழ்வோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்நிகழ்வில் உரையாற்றிய Clarissa Hayward, “இந்த தீர்வுகள் IoT (Internet of Things), தரவுப் பகுப்பாய்வு மற்றும் AI போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து நகரத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துகின்றன. இது உலகின் அனைத்து மூலைகளிலும் அதன் உடனடி பரவலை கணிப்புகள் மூலம் எதிர்வுகூறுவதன் மூலம், உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட பிராந்தியங்களில் விரைவான விரிவாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.” என்றார். 

அந்த வகையில், Softlogic IT இன் கூட்டு முயற்சிகள் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் அனைவரின் விடாமுயற்சியின் காரணமாக, API Asia Conference 2023 மாநாடானது, மிகப் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் துல்லியமான திட்டமிடலானது, ஒரு பரந்த மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுக்கு வழியேற்படுத்தியுள்ளதோடு, இதன் மூலம் API தொழில்நுட்ப களத்தில் நுண்ணறிவு கொண்ட கலந்துரையாடல்கள், ஒருவருடன் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மற்றும் புத்தாக்கமான முன்னேற்றங்களுக்கான தளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Softlogic IT தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: https://softlogicit.lk/ 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT