Sunday, May 5, 2024
Home » வலுவான நிலநடுக்கங்கள்: சாத்தியங்கள் மிகக் குறைவு

வலுவான நிலநடுக்கங்கள்: சாத்தியங்கள் மிகக் குறைவு

by mahesh
December 13, 2023 7:30 am 0 comment

நாட்டில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவென, புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவல் அதிகாரி புவியியலாளர் நில்மினி தல்பே தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவுகோலில் 5க்கும் குறைவான சிறிய நிலநடுக்கங்கள் நாட்டில் ஏற்படுகின்றன. நாட்டில் நான்கு நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன.

அம்பலாங்கொட, ஹக்மன, பல்லேகலை மற்றும் மஹகந்தராவ பிரதேசங்களிலேயே இந்த நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், நில அதிர்வு பதிவுகளில் தரவு பதிவு செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தின் வலிமை, நிலநடுக்கம் எவ்வளவு தூரத்திலிருந்து ஏற்படுகிறது.

எவ்வளவு ஆழம் என்பது போன்ற விடயங்கள் இதில்,பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிறப்பு செயல்பாட்டு அறை 24 மணி நேரமும் செயற்பட்டு, மக்களுக்கு விரைவாக தகவல்களை தெரிவிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT