Home » மத நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக செயற்படும் புத்தளம் பெரிய பள்ளிவாசல்

மத நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக செயற்படும் புத்தளம் பெரிய பள்ளிவாசல்

மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் குழுவினரின் நல்லிணக்க விஜயம்

by mahesh
December 13, 2023 9:50 am 0 comment

மாத்தறை மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் சகவாழ்வும் நாட்டிற்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதற்கு இனங்க மாவட்டங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக, மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவரது குழுவினர் மத நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமான புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி ஹேரத், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேஹ் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் சர்வமதக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தியகம ரத்தன தேரர், தம்ம குசல தேரர் , சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள், அருட்தந்தை யோஹான் மற்றும் அஷ்ஷேஹ் முஜீப் சாலிஹ் உள்ளிட்ட உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டனர்.

சர்வமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் வரவேற்புரை ரம்யா லங்காவின் பணிப்பாளர் அலி சப்ரியினால் நிகழ்த்தப்பட்டதுடன் வருகைதந்தவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பணியகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சித் திட்டமானது மாத்தறை மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் சகவாழ்வும் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் எனவும் இவ்வாறான பயணங்களின் ஊடாக சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்ட சர்வமதக் குழு சார்பாக திருமதி முஸ்னியா உவைஸின் உரையும் புத்தளம் மாவ‌ட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் மாத்தறை மாவ‌ட்ட செயலாளர்,வை.விக்ரம ஸ்ரீ ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றது.

அடுத்து வருகை தந்த குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தை சுற்றிப் பார்த்ததுடன் அங்கு மேற்கொள்ளப்படும் அன்றாட சமய சடங்குகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளையும் பள்ளிவாசலில் உள்ள வரலாற்றுக் கால கடிகாரத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இவர்களுக்கான விளக்கங்களையும் நெறிப்படுத்தல்களையும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் நிஜாம் மற்றும் அஷ்ஷேஹ் முஜீப் சாலிஹ் ஆகியோர் மேற்கொண்டனர். இவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமை குறித்து வருகைதந்த அனைவரும் தமது நன்றிகளை தெரிவித்துடன்

புத்தளம் பிரதேசம் சர்வமத நல்லிணக்கம் சிறப்பாக செயற்படும் பிரதேசமாகும், புத்தளம் சர்வமதக் குழு இவ்வாறான நிகழ்ச்சிகளை தொடராக நடாத்தி இனங்களுக்கிடையிலான தவறான புரிதலை நீக்கும் முயற்சியில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

(படமும் தகவலும் கற்பிட்டி - எம்.எச்.எம் சியாஜ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT