Home » இந்திய நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டு வீச்சு

இந்திய நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டு வீச்சு

- பார்வையாளர்கள் இருவரின் அத்துமீறல்

by Prashahini
December 13, 2023 4:13 pm 0 comment

– ஒத்தி வைக்கப்பட்டது மக்களவை 

இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் அவைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் திகதி தொடங்கி ,டிசம்பர் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று (13) நாடாளுமன்றம் தாக்குதல் தினமாகும். 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி லக்ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய குழுக்களைச் சேர்ந்த 5 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாக்கத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மக்களவை தலைவர் ஓம்.பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்பிறகு மக்களவை தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி மக்களவைக்குள் நுழைந்தனர்.

 

அமைச்சர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மற்றும் மேசைகள் மீது தாவிச் சென்ற அவர்கள் கையில் இருந்த வண்ண புகை குண்டுகளை வீசினர். அதில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியது. இதனால் மக்களவை பரபரப்பானது.

அவர்கள் இருவரையும் அமைச்சர்களே சுற்றி வளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு, உடனடியாக அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்துமீறி நுழைந்தவர்கள் ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x