766
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக களனி பாலம் மூடப்பட்டிருந்தது.
இதன்பின்னர் திருத்தப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் குறித்த பாலம் மூடப்படவுள்ளது.
பாலம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கட்டம் 02 – டிசம்பர் 08 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 11 (திங்கள்) 6.00 a.m.
கட்டம் 03 – டிசம்பர் 15 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 18 (திங்கள்) 6.00 a.m.