கொலை வழக்கு ஒன்றில் பிணையில் வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கருகில் நேற்றிரவு (26) சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரே நேற்று (26) இரவு 10.00 மணியளவில் சடலமாக காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஸ் என்பவராவர்.
குறித்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் கொலையா அல்லது தற்கொலை என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர்