இலங்கையின் முன்னணி ஆயுர்வேத அழகுசாதன வர்த்தகநாமமான சந்தனாலேப, பெருமைக்குரிய 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்துறை விசேடத்துவ விருது வழங்கல் (National Industry Excellence Awards 2023) விழாவில் மீண்டுமொருமுறை கௌரவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய கைத்தொழில் விசேடத்துவ விருது வழங்கும் விழாவானது, பல்வேறு துறைகளில் உள்ள உள்ளூர் தொழில்முனைவோருக்கு அங்கீகாரம் வழங்கும் பெருமைக்குரிய நிகழ்வாகும்.
தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் கடந்த காலங்களில் பல முறை விருது பெற்றதன் மூலம் சந்தனாலேபவின் தொடர்ச்சியான வெற்றியானது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.