Home » பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை

- மண்மேட்டை அகற்றும் பணிகள் துரிதம்

by Prashahini
November 22, 2023 9:40 am 0 comment

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

இந்த மண்மேட்டை அங்கிருந்து அகற்றும் பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் அதிகமான நிலச்சரிவுகள் இப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் அதிகமான போக்குவரத்து நாளாந்தம் இடம்பெற்று வருகின்றமையால் அந்த மண்மேட்டை துரிதமாக அகற்றும் பணிகளில் பொதுமக்கள் உதவியுடன் இடம்பெறுவதாக போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

பலாங்கொடை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT