CBL சமபோஷ 100% தேசிய நிறுவனம் என்ற ரீதியில் எதிர்கால சந்ததியினரை தரம் மிக்க சந்ததியினராக உருவாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டிவரும் வர்த்தக நாமமாகத் திகழ்கிறது.
சமபோஷ ‘சிகரம் தொடும் சிறார்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறுவர்களின் கல்வித் திறன், விளையாட்டுத் திறன், போஷாக்கு, படைப்பாற்றல் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதற்கு தலைமைத்துவம் வழங்கி வருகிறது.
CBL சமபோஷ 2023 மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் மற்றுமொரு கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் வெற்றிகரமான முறையில் பூர்த்தியடைந்தது. இந்தப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் சம்பியன் பட்டத்தை வென்றிருப்பதுடன், இரண்டாவது இடத்தை அக்கறைப்பற்று கல்வி வலயம் மற்றும் கல்முனை கல்வி வலயம் ஆகியன பெற்றுக்கொண்டன.