Sunday, May 5, 2024
Home » அரச ஊழியர்களின் வாழ்க்ைகச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் வாழ்க்ைகச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

by damith
November 14, 2023 6:00 am 0 comment

* ஓய்வூதியக்காரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு

* 2024 பட்ஜட், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டம்

* வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி ரணில் உரை

* காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கீடு

* பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்ைக. இதற்கென ஆரம்பகட்டமாக 04 பில்லியன் ரூபா ஒதுக்கீடு:

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டமெனவும் அத்துடன் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார முறைமைக்கு அடித்தளமிடும் வரவு செலவுத் திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

அந்த வேலைத்திட்டத்துடன் நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதனை இனியும் தொடர முடியாது – பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியான கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும். ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது. -சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. –

‘வலுவான எதிர்காலத்துக்கான முன்னுரை’ என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (13) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

* வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்ற த்துக்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வடக்கு, கிழக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு :

* சுற்றுலா கைத்தொழில் துறை அபிவிருத்திக்கு 08 பில். ரூபா ஒதுக்கீடு.

* மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படுவதுடன் அரச தனியார் துறை ஒன்றிணைந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

* விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள் இதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

* மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 500 மில்.ரூபாய் ஒதுக்கீடு, நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்திக்கு 200 மில். ரூபாய் ஒதுக்கீடு.

* திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை

* நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையும் இதற்கு ஆரம்பகட்டமாக 04 பில். ரூபாய் ஒதுக்கீடு.

* மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

* அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்பதனால் இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

* உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் இலங்கையில் பல்கலைகளை நிறுவ அனுமதி

* சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில், கண்டியில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.

* 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு 2024 ஆம் ஆண்டில் 01 பில்.ரூபா ஒதுக்கீடு.

* சுற்றுலா கைத்தொழில் துறை அபிவிருத்திக்கு 08 பில். ரூபா ஒதுக்கீடு.

* அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள்.

* இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும்:

* திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும்.

* பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

* சிறு, நடுத்தர கைத்தொழில் துறை அபிவிருத்திக்கு அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டியில் கடனுதவி. இதற்கு 30 பில். ரூபா ஒதுக்கீடு.

* சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்.ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு.

* உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.

* நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 04 பல்கலைகள் ஸ்தாபிக்கப்படும் :

* நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்.

* வீதி புனரமைப்புக்காக 10 பில்.ரூபா ஒதுக்கீடு:

* மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க 10 பில். ரூபா ஒதுக்கீடு :

* கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக வழங்கப்படும்.

* கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில். ரூபா ஒதுக்கீடு :

* சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிப்பு.

* விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு

* 2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு:

* இ.போ.சவுடன் இணைந்து மேல் மாகாணத்தில் 200 மின்சார பஸ்களை இயக்கும் முனோடிதிட்டம் ஆரம்பிக்கப்படும்

* 2024 இல் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை ரயில் பாதை புனரமைப்பு திட்டம் பூர்த்தி செய்யப்படும்

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT