Sunday, April 28, 2024
Home » கல்வி முறைமைகள் அடுத்த வருடம் டிஜிட்டல் மயமாக்கப்படும்

கல்வி முறைமைகள் அடுத்த வருடம் டிஜிட்டல் மயமாக்கப்படும்

by damith
November 6, 2023 7:30 am 0 comment

கல்வி முறைமைகள் அடுத்த வருடத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும், இதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் 4,672 புதிய நியமனங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இங்கு பேசிய அமைச்சர்: கல்வி முறைமைகள் அடுத்த வருடம் டிஜிட்டல் மயமாக்கப்படும்.இதற்கான சகல நிதி வசதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும். கல்வி சீர்திருத்தங்களின் திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.

சகல அதிபர்கள், ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையைப் பின்பற்ற வேண்டும். கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் அதைத் தொடர வேண்டும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT