யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட உடுவில் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலையில் கழிப்பறைக்கு சென்ற மகன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்து தாயார் மகனை அழைத்து, கழிப்பறை கதவை தட்டிய போதும், சத்தத்தை காணாததால், கதவை உடைத்த போது, மகன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கழிவறைக்கு அருகில் போதை பொருள் பாவனைக்கு பயன்படுத்தும் ஊசி , தேசிக்காய் என்பவை காணப்படுவதால், இளைஞன் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்தமையால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்.விசேட நிருபர்