Thursday, May 16, 2024
Home » மின்சார வாகனங்களை பிரபலப்படுத்த ஹேமாகமவில் இரு நாள் கண்காட்சி
அமைச்சர் பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவில் உருவான

மின்சார வாகனங்களை பிரபலப்படுத்த ஹேமாகமவில் இரு நாள் கண்காட்சி

by sachintha
October 3, 2023 8:57 am 0 comment

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தப்படும் பொருட்டு மின்சார வாகனங்கள் அறிமுகஞ் செய்யப்படவுள்ளன.இதற்கிணங்க இவ்வாகனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து விழிப்பூட்டும் கண்காட்சி ஹோமாகம பிட்டிபனவில் இம்மாதம் 14 மற்றும் 15 ம் திகதிகளில நடத்தப்படவுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,போக்குவரத்து அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரு கிராமத்தை பசுமைக் கிராமமாக அபிவிருத்தி செய்யும் கருத்தின் கீழ், ஹோமாகம பிடிபன பிரதேசம் பொருத்தமானதாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கான பசுமைப் பல்கலைக்கழகம் (NSBM) இப்பகுதியில்தான் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தை பயன்படுத்துவோர் இந்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த முடியும்.

இலங்கையில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார சைக்கிள்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த வாகனங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இலங்கையில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள போதிலும், நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இது குறித்த நடைமுறை புரிதல் இல்லாதுள்ளது. குறைந்த செலவில் இயக்கக்கூடிய மின்சார வாகனங்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு முன்னுதாரணமாக போக்குவரத்து அமைச்சை பசுமையாக்கும் கொள்கையின் கீழ், இந்த வாகனங்களின் பயன்பாட்டை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்த அமைச்சு தயாராகி வருகிறது.

இதற்காக பசுமைப் பல்கலைக்கழகம், நெனோ தொழினுட்ப நிறுவனம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம், மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி உள்ளிட்ட உள்ளுராட்சி நிறுவனங்களினதும் பங்களிப்பைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் மின்சார சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகன உற்பத்தியாளர்கள் மீது அரசு நிறுவனங்களின் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பது மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சினைக்கு ஒரே மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT