145
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக தேசிய மட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு மாவட்ட அணியை காரைதீவு அணி வெற்றிகொண்டது.
இந்தப் போட்டி மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இப்போட்டிகளில் அம்பாறை மாவட்ட அணி முதல் போட்டியில் கொழும்பு மாவட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட அணி சார்பாக காரைதீவு ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு குறூப் நிருபர்