Sunday, May 19, 2024
Home » John Keells Properties யின் மற்றுமொரு குடியிருப்புத் திட்டமான ‘Viman’

John Keells Properties யின் மற்றுமொரு குடியிருப்புத் திட்டமான ‘Viman’

by sachintha
September 20, 2023 9:27 am 0 comment

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புரட்சியை ஏற்புத்தியுள்ள John Keells Properties (JKP), ஜா—–எல நகரின் மையப்பகுதியல் சமகால வாழ்க்கையை மாற்றும் வகையில் தனது புதிய குடியிருப்புத் திட்டமான ‘Viman’ ஐ அறிமுகப்படுத்துகிறது.

புகழ்பெற்ற John Keells Holdings நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பான பிரிவாக விளங்கும் John Keells Properties நிறுவனம், கனவு வாழ்க்கைக்கான இடங்கள் மற்றும் விதிவிலக்கான அனுபவங்களை வழங்கப் புதுமையான அணுகுமுறையுடன் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி ரியல் எஸ்டேட் சந்தையில் மதிப்புமிக்க நற்பெயரை சம்பாதித்துள்ளது.

‘புதிய உலகத்தை உருவாக்குதல்’ என்ற நோக்கத்துக்கு இணங்கும் வகையில், வாழ்க்கையின் அனுபவங்களை மறுவடிவமைப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் அமையப்பெற்றுள்ள Viman குடியிருப்புத் திட்டம் John Keells Properties நிறுவனத்தின் தனித்துவமான புதிய முயற்சியைப் பிரதிபலிக்கிறது. 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருப்பதுடன், Viman குடியிருப்புத் திட்டத்தின் வடிவமைப்பானது சிறிய நகரின் கட்டமைப்பின் அழகைத் தக்கவைக்கும் அதேநேரம், கொழும்பு நகரை இலகுவில் அணுகக் கூடியதாகவும், பாதுகாப்பு, குடும்பங்களுக்கு நட்பான சூழலை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
John Keells Holding PLC நிறுவனத்தின் உடமைப் பிரிவின் தலைவர் நயன மாவில்மட குறிப்பிடுகையில், “John Keells Properties நிறுவனத்தின் சமீபத்தைய எல்லையாக இருக்கும் Viman ஐ அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது வெறுமனே ஒரு குடியிருப்பாக மாத்திரம் அமையாது என நாம் நம்புகின்றோம். இது சிறிய நகரின் அரவணைணப்பில் மூழ்கியிருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக அமையும். சமநிலை, இயற்கை மற்றும் நவீன வசதி போன்ற அடிப்படைகளால் ஈர்க்கப்பட்டு, சுற்றுச் சூழல் பற்றிய கரிசனை, பல்வேறு இடங்களுக்கான அணுகல், சமூக உணர்வை வளர்த்தல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட குடியருப்புக்களைக் கொண்ட தொகுதியாக இது காணப்படுகிறது. ஸ்மார்ட் நகரமயமாக்கலுக்கு மக்களை மையமாகக் கொண்ட திட்டமாக இது அமைந்துள்ளது என்றார்.

ஜா-எல நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புக்கள், சுப்பர்மார்க்கட்டுக்கள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இலகுவான அணுகலைக் கொண்டுள்ளன. மேலும் Viman குடியிருப்புத் திட்டமானது கொழும்புத் துறைமுக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்திருப்பதுடன், ஜா-எல மற்றும் கொழும்புக்கு இடையே விதிவிலக்கான இணைப்பை எளிதாக்குகிறது. இந்த மூலோபாய அமைவிடமானது சௌகரியத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி, குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு செயற்திறன்மிக்க பயண வழியையும் உறுதிப்படுத்துகிறது.
படங்கள் சுதத் மலவீர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT