Monday, May 20, 2024
Home » ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை யாழ்நகரில் நடத்தும் IVF கருத்தரிப்பு ஆலோசனை முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை யாழ்நகரில் நடத்தும் IVF கருத்தரிப்பு ஆலோசனை முகாம்

by sachintha
August 29, 2023 11:02 am 0 comment

இந்தியாவின் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிர்வரும் செப்டம்பர் 8, 9, 10 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தவிருக்கிறது. இந்த முகாமில் கருத்தரித்தலுக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. கோயம்புத்தூரில் இம்மருத்துவமனை 1975 இல் நிறுவப்பட்டது.இம்மருத்துவமனை சிக்கலான நோய்களுக்கும் திறம்படச் சிகிச்சை அளித்து வருகின்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே IVF கருத்தரித்தல் சேவையை அறிமுகப்படுத்தியது.

IVF துறையில் புகழ் பெற்ற மருத்துவர்களான எம்.எஸ்.லட்சுமி மற்றும் சுகன்யா ஆகியோர் மருத்துவம் மேற்கொண்டு வருகின்றனர். கருவுறாமை பிரச்சினைகள் உள்ள தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவர் சுகன்யா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள முகாமுக்கு வருகை தருகிறார். பிறநாடுகளில் இருந்து கருத்தரித்தல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவர்கள் சொந்த

நாட்டிற்குத் திரும்பும் வரை விமான நிலையத்திலிருந்து இறுதி வரையிலான சேவைகள் (End to End Service) வழங்கப்படும்.

பல்கேரியா, ஆபிரிக்கா, பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில் இருந்து கருவுறாமை பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. IVF இன் சமீபத்திய முன்னேற்றம் மூலம், மருத்துவமனை சர்வதேச தரநிலையில் வெற்றியை பெ ற்றுள்ளது.

கருவுறுதலில் பிரச்சினைகள் உள்ள தம்பதிகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர் சேவைகளை வழங்குகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை யின் IVF நிபுணர்கள், தீர்க்க முடியாத சில நோய்களை இனங்கண்டுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள IVF துறை குழந்தை இல்லா புற்றுநோயாளிகளுக்கு கூட சிகிச்சை வழங்குகிறது. சிகிச்சையை நாடுவோர் தங்குமிடத்தைத் தெரிவு செய்யலாம். கர்ப்பிணிகள் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடியும். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இலட்சியம் மிக உயர்ந்த, தரமான மருத்துவ சேவை வழங்குவதாகும். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை யின் மருத்துவ முகாம் நம்பிக்கையின் விளக்கமாகவும், கனவுகளுக்கான புகலிடமாகவும், மனித

முயற்சியின் சான்றாகவும் நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் MEDICARE -2023 இற்கு வருகை தந்து கருத்தரிப்புக்கான ஆலோசனை பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:

Thajudeen Ahamed. M

Manager – Marketing & International

Affairs

Preventive Medicare PVT. LTD.

+91-9159502714 – Whatsapp

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT