Saturday, May 18, 2024
Home » ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் பணியாற்ற ஒரு முற்போக்கான இடம்

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் பணியாற்ற ஒரு முற்போக்கான இடம்

by Rizwan Segu Mohideen
August 24, 2023 4:19 pm 0 comment

நாட்டின் மிகப் பெரிய அரசுக்கு சொந்தமான காப்புறுதி நிறுவனமான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ், பல்வேறு பின்னணிகளையும் பெருமளவிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் என்பதில் பெருமிதம் கொள்வதுடன், இதுவே அந்நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்துமாகும்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் 2600 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் மற்றும் 8000 க்கும் மேற்பட்ட முகவர்களுடனும் இயங்கக்கூடிய ஒரு அரச நிறுவனம். அது மட்டுமின்றி அனைத்து ஊழியர்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, ஒற்றுமை, நிபுணத்துவ அர்ப்பணிப்பு, நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் விடா முயற்சி போன்ற நிறுவன கலாச்சாரத்தை, தலைமைத்துவத்தில் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் நடைமுறை படுத்துவதில் நம்பிக்கை கொள்கின்றது.

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் அதன் விழுமியங்களை பின்பற்றுவதால் நிறுவனம் மனிதவளத்தின் சிறந்த நடைமுறைகளை அங்கீகரிப்பதை உறுதிசெய்கின்றது. இது ஒரு நேர்மறையான மற்றும் முற்போக்கான பணியிட கலாச்சாரத்திற்கு பங்களிப்பதுடன் அதன் மக்களை நீண்ட காலத்திற்கு தக்கவைத்து, அதன் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்பட வைக்கின்றது. நிறுவனம் எல்லா நேரங்களிலும் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை பேணுகின்றது. இது அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் நியாயமான முறையில் அனைத்து மக்களின் முழு பங்கேற்பையும் ஊக்குவிக்கிறது. தொழிற்சங்க உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம், பங்குதாரர்களுடன் இணைந்து முக்கிய முடிவுகள் எடுத்தல் போன்றவற்றில் முதலாளிக்கும் பங்குதாரர்களுக்கும் இடையே தொடர்ச்சியான வெளிப்படைத்தன்மையை பேணுகின்றது.

நல்ல தலைவருக்கு அவர்களின் மக்கள் மீது அன்பு காட்டுவது இன்றியமையாததாகும். அதன் அடிப்படையில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இருவழித் தொடர்பின் முக்கியத்துவத்தை நம்புகின்றது. எனவே நிறுவன ஊழியர்களை தங்கள் எண்ணங்களையும் குறைகளையும் நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்து அவர்களின் குறைகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கின்றது. உதாரணமாக – ஊழஎனை தொற்றுநோய்களின் போது நெகிழ்வான வேலை நேரம், தொலைதூர வேலை விருப்பங்கள் வழங்கப்பட்டன மற்றும் அந்தந்த பங்குதாரர்களிடையே பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடைமுறைகள் இன்றுவரை தொடர்கின்றன. இதேபோல், வணிக நோக்கங்களை இயக்க புத்தாக்கமான யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதில் பணியாளர்கள் ஈடுபடுவதற்கு பல மன்றங்கள், தளங்கள் உள்ளன.

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் அனைத்து மட்டங்களிலும் பணியிட துன்புறுத்தலின் போது சகிப்புத்தன்மை அல்லாத கொள்கையைப் பின்பற்றுகின்றது. துன்புறுத்தலின் தன்மையைப் பொருட்படுத்தாமல், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கையை நிறுவனம் எப்போதும் எடுக்கும், மேலும் இந்த பணி கலாச்சாரத்தில் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதும், ஒரு ஊழியர் குரல் கொடுப்பதற்கு எந்த கவலையுமின்றி நம்பிக்கையுடன் எந்த அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கலாம்.

ஒரு அரச நிறுவனமாக ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் தனது ஊழியர்களை சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், நிறுவன ஊழியர்களுக்கு பல நன்மைகளையும் வழங்குகின்றது. தொழில் தரங்களுக்கு இணையான ஊதியம், தடையற்ற மருத்துவப் பலன்கள், கடுமையான நோய்களுக்கான கருணைத் தொகை செலுத்துதல் மேலும், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸில் ஊழியர்களை சிறப்பான இடத்தில் வைத்து அங்கீகரித்து மற்றும் அவர்களின் வெற்றியை கொண்டாடும் கலாச்சாரத்தை ஆதரிக்கிறன்றது.

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸின் ‘பணியிட கலாச்சாரம்’ குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சந்தன அலுத்கம, ஒரு நேர்மறையான பணியிட கலாச்சாரத்தின் செயல்திறன் நிறுவனத்தின் முன்னேற்றகரமான பணியிடத்திற்கு பங்களிக்கின்றது. இது அனைத்து பங்குதாரர்களையும் ஊக்குவிப்பதுடன் நிறுவனத்தின் ஒரு நம்பிக்கையான வர்த்தக நாம அடையாளத்தை உருவாக்குகின்றது. எனவே, ஒரு அமைப்பாக, நிறுவன கலாச்சாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த அனைத்து மட்டங்களிலும் எங்கள் முக்கிய நோக்கங்களையும் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு சவாலான செயலாகும். மேலும், திறந்த உரையாடல்கள், பன்முகத்தன்மை, ஊழியர்களுடன் நியாயமான சமத்துவம் ஆகியவற்றை நாங்கள் நம்புகின்றோம். மேலும் நிறுவனமானது ஊழியர்களிடையே ஒரு வெளிப்படையான கலாச்சாரத்தை பேணுவதையே ஊக்குவிக்கின்றது.

பிரதிப் பொது முகாமையாளர் – மனித வளம் மற்றும் ஊழியர் நலன் திரு. ரோஹித அமரபால கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக வர்த்தகத்தில் முதிர்ச்சியடைந்த நிறுவனமாகும். ஒரு முதிர்ந்த நிறுவனத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்திடுவது என்பது ஒரு சவாலான செயலாகும், இருப்பினும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் தலைமைத்துவத்தின் நல்ல அணுகுமுறையுடன் ஒரு முன்மாதிரியை உருவாக்கி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மேலும் பகிரப்பட்ட மதிப்புகள் முக்கிய ஊழியர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றன மற்றும் பணியாளர்களிடையே சிறந்த உறவுகளை வளர்க்கின்றன.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் பற்றி
1962 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீP லங்கா இன்ஷுரன்ஸ், இலங்கையின் அரசாங்கத்திற்குச் சொந்தமான மிகப் பெரிய காப்புறுதி நிறுவனமாக 60 வருடங்களுக்கும் மேலான சிறப்பைக் கொண்டாடுகின்றது. ரூ. 274 பில்லியன் சொத்துக்களையும் மற்றும் ரூ. 156.7 பில்லியன் ஆயுள் நிதியமும் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனம். மற்றும் அதன் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்காக குவைஉh யு (டமய) மதிப்பீட்டை கொண்டுள்ள ஒரே காப்புறுதியாளர்; ஸ்ரீP லங்கா இன்ஷுரன்ஸ் ஆகும். மேலும் டீசயனெ குiயெnஉந ஆல் ஸ்ரீP லங்கா இன்ஷுரன்ஸ் தொடர்ந்து 6 வது ஆண்டாக “மிக மதிப்புமிக்க பொதுக் காப்புறுதி வர்த்தக நாமம்;” எனவும், “மிகவும் விரும்பப்படும் காப்புறுதி வர்த்தக நாமம்” எனவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து புத்தாக்கங்களையும் புகுத்தி வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இயங்கக் கூடிய தேசிய காப்புறுதி நிறுவனமாக திகழ்கின்றது. மேலும் 190 கிளைகள் மூலம் வாடிக்கையாளர் சேவை மையங்களைக் கொண்டு; வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவை செய்து வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT