Home » அதன் வசீகரத் தன்மையினை மென்மேலும் உயர்த்தும் Prima KottuMee

அதன் வசீகரத் தன்மையினை மென்மேலும் உயர்த்தும் Prima KottuMee

by Rizwan Segu Mohideen
August 15, 2023 3:18 pm 0 comment

முதன்மை நுகர்வோர் வர்த்தகநாமங்களில் ஒன்றான Prima KottuMee, அதன் சமீபத்திய புதிய தயாரிப்பின் அறிமுகத்தின் மூலம் அதன் கவர்ந்திழுக்கும் தன்மையினை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமம் Prima KottuMee, வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல நுகர்வோரை மகிழ்வித்து, அதன் Hot & Spicy பயணத்தினை கொண்டாடி மகிழ்ந்தது.

கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் நிறுவனத்தின் முகாமைத்துவம், உள்ளக குழு உறுப்பினர்கள், வர்த்தகநாம தூதர்கள், யொஹானி மற்றும் அஷான்யா மற்றும் தொடர்பாடல் பங்காளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“Prima KottuMee இன் ‘Hot N’ Spicy” மரபை பற்றி சிந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பயணமானது தனித்துவம்மிக்கது. அசல் ‘Hot N’ Spicy சுவையினை விரும்பும் நுகர்வோரை பெரிதும் கவர்ந்துள்ளது. நாம் தொடர்ந்தும் புதுமுறையிலான தயாரிப்புகளை வழங்குவதும் நுகர்வோருடன் எப்போதும் இணைந்திருப்பதுமே எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான Prima KottuMee அனுபவத்தை வழங்கிட எப்போதும் துணைபுரின்றன என நாங்கள் நம்புகிறோம்” என்று இலங்கையின் Pசiஅய குழுமத்தின் சிலோன் அக்றோ இன்டஸ்ட்ரீஸ்(பிரைவட்) லிமிட்டெட் இன் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவித்தார்.

வர்த்தக நாமம் ஆனது மேம்படுத்தப்பட்ட பொதியிடல், இளமை ததும்பும் அதன் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தியமை, மேலும் அதன் கவர்ச்சியை மேம்படுத்துகிறது. புதுப்பிக்கப்பட்ட நிறுவனக் குறி (லோகோ) வர்த்தகநாமத்தின் புதிய தோற்றத்திற்கு முக்கிய அங்கமாக திகழ்கின்றது. வர்த்தகநாமத்திற்கு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கு ஒரு சான்றாக, Prima KottuMee ஆனது முறையே 2022 மற்றும் 2023 இல் ஆண்டின் விளம்பரத்திற்கான மதிப்புமிக்க SLIM Kantar Peoples’ விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்கள் மற்றும் ஏஜென்சி பங்காளர்களின் கூட்டு முயற்சிகள் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.

சர்வதேச புகழ் பெற்ற பாடகர் யொஹானி டி சில்வா மற்றும் வளர்ந்து வரும் இளம் கலைஞருரான அஷான்யா பிரேமதாச ஆகியோர் புயலாக மேடை ஏறி திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளை வழங்கியதுடன், வர்த்தகநாமத்தின் மரபுக்கு அவர்கள் செய்த சிறப்பு பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களின் துடிப்பான ஆளுமைகள், ஒப்பற்ற திறமை மற்றும் புதுப்பாணியிலான இயல்புதிறமை ஆகியவை வர்த்தகநாமத்தின் ‘Hot N’ Spicy தனித்துவமான இயல்பினை முழுமையாக பூர்த்தி செய்தன. இந்த ஒப்பற்ற இளம் திறமையாளர்கள் வர்த்தகநாமத்தின் இளமைத் துடிப்பையும் உற்சாகமிகு ஆற்றலையும் எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வார்கள் என்பது உறுதி.

டிஜிட்டல் அரங்கில் தனது கால்தடத்தை விரிவுபடுத்தும் வகையில், Prima KottuMee தனது வர்த்தகநாமத்தின் இணையதளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்த அதேவேளையில் வர்த்தகநாமத்தின் யூடியூப் சேனலில் புதிய Prima KottuMee பாடல் வெளியீட்டையும் இணையாக அறிமுகப்படுத்தினர்.

‘Hot N’ Spicy நுகர்வோரை மகிழ்விக்கும் வகையில், பிரீமா கொத்துமீ, மிகவும் காரசாரமான “Nai Miris” ஐ அறிமுகப்படுத்தியது, இளைஞர்களிடையே கார உணவிற்கான விருப்பத்தினை பூர்த்தி செய்வதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள சமீபத்திய தயாரிப்பான “Nai Miris” Prima KottuMee எதிர்காலத்தில் ‘Hot N’ Spicy நுகர்வோரை மென்மேலும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.

‘Hot N’ Spicy சலுகைகள் மற்றும் மேலதிக தகவல்களை அறிய, Prima KottuMee இணையதளமான www.primakottumee.com ஐ பார்வையிடவும். Prima KottuMee என்றுமே ‘Fun தான்!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT