Wednesday, May 15, 2024
Home » Dr. Fixit இன் வர்த்தகநாம தூதுவராக ரொஷான் மஹானாம நியமனம்

Dr. Fixit இன் வர்த்தகநாம தூதுவராக ரொஷான் மஹானாம நியமனம்

- நீர்க் கசிவுகள் இல்லா வீடுகளுக்காக நீர்த்தடுப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

by Rizwan Segu Mohideen
August 14, 2023 11:18 am 0 comment

– ‘Mahanama of Waterproofing’ எனும் பெயரில் விளம்பர ஊக்குவிப்பு திட்டம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நீர்த்தடுப்பு தயாரிப்பான Dr. Fixit இன் வர்த்தக நாம தூதுவராக பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாம நியமிக்கப்பட்டுள்ளதாக Pidilite Lanka நிறுவனம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. Pidilite Lanka நிறுவனமானது புகழ்பெற்ற இலங்கை McLarens Group இல் ஒன்றான Macbertan மற்றும் Pidilite Industries ஆகியவற்றுடன் இணைந்த கூட்டு நிறுவனமாகும்.

Pidilite Industries நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்குப் பொறுப்பான தலைமை வணிக அதிகாரி யோகேஷ் ஆனந்த் இதன்போது கூறியதாவது, “வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் புதுப்பிக்கும் போது சரியான வகை நீர்ப்புகா தீர்வுகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், நீர் கசிவு காரணமாக பல்வேறு வகையான சேதங்கள் ஏற்படலாம், இதனால் பெரும் இழப்புகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் ஏற்படலாம். இதனால் Pidilite அறிமுகப்படுத்திய மிகவும் வெற்றிகரமான நீர்த்தடுப்பு தயாரிப்பான Dr.Fixit, நீர்ப்புகா பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து இலங்கையர்களுக்கு தெளிவூட்ட எதிர்பார்க்கின்றது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான ரொஷான் மஹானாமவை எமது வர்த்தக நாம தூதுவராக நியமித்ததன் மூலம், இந்த விழிப்புணர்வு பணிகளுக்கு பெருமளவு ஒத்துழைப்புகள் கிடைக்கும். கிரிக்கெட் வீரராக அவர் பெற்றுள்ள நம்பகத்தன்மையே இதற்குக் காரணம். இந்த ஒத்துழைப்பின் மூலம், நீர்த்தடுப்பு முக்கியத்துவம் குறித்து இலங்கையர்களுக்கு வெற்றிகரமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒவ்வொரு இலங்கையரையும் நீர்க் கசிவு இல்லாத வீட்டு உரிமையாளராக மாற்றவும் எங்களுக்கு முடியுமாக இருக்கும்”

இந்த ஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாம கூறுகையில், “பலமான அடித்தளத்தின் தேவை, மிகத் துல்லியம் மற்றும் சிறிய விஷயங்களில் கூட முழு கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவை கிரிக்கெட் மூலம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பண்புகளாகும். இவை அனைத்தும் Dr.Fixit கொண்டுள்ளது. இதன்மூலம் ஒரு வீட்டிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய அங்கமாக Dr.Fixit உள்ளது. எனவே, நான் Dr.Fixit வர்த்தக நாம தூதுவராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்பதனை கூற வேண்டும். எங்கள் ஒத்துழைப்பின் மூலம், களத்தில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் தனது விக்கெட்டைப் பாதுகாப்பது போல், இலங்கையர்களின் அழகான வீடுகளை நீர்க் கசிவுகளிலிருந்து முழுமையாகப் பாதுகாப்போம் என்று நம்புகிறோம்”

இது குறித்து Pidilite Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் McLarens Group நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரமணி பொண்ணம்பலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘’Dr.Fixit மற்றும் ரொஷான் மஹாநாம ஆகிய இரண்டு புகழ்பெற்ற வர்த்தக நாமங்களின் இந்த பணிகள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். Pidilite Lanka பல வருடங்களாக நாடு முழுவதும் கட்டியெழுப்பியுள்ள விற்பனை வலையமைப்பின் ஊடாக Dr.Fixit தயாரிப்புகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கு இந்த ஒத்துழைப்பு பெரும் உதவியாக இருக்கும்”

இலங்கையின் வீட்டு உரிமையாளர்களை நீர்த்தடுப்பு தொடர்பில் தெளிவூட்ட மற்றும் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்கவும் Dr.Fixit அர்ப்பணிப்புடன் கூடிய குழுக்களை நியமித்துள்ளது. அத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், drfixitlanka.com என்ற பிரத்தியேக இணையத்தளம் மற்றும் 0117-608088 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Pidilite Lanka தனியார் நிறுவனம் பற்றி:
Pidilite Lanka என்பது இலங்கையின் புகழ்பெற்ற நிறுவனமான McLarens Group இன் இணை நிறுவனமான MacBertan மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற Pidilite Industries ஆகியவற்றின் கூட்டிணைவுடன் 2015ஆம் ஆண்டில் உருவான கூட்டு நிறுவனமானமாகும். இந்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பொல்காவலை பிரதேசத்தில் அமைந்துள்ளது.
தனித்துவமான அர்ப்பணிப்பின் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாக புதுமைகளை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் ஒரே தேர்வாக மாற்றுவதே Pidilite Lanka நிறுவனத்தின் நோக்கமாகும். தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும், இந்த தயாரிப்புகளை தனது மிகப்பெரிய விற்பனை வலையமைப்பின் ஊடாக ஒவ்வொரு இலங்கையரும் இலகுவாகப் பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்குமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயல்பாட்டில் Pidilite Lanka நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Pidilite Lanka நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தயாரிப்புகளில் FEVICOL, CHEMIFIX, DR. FIXIT, M-SEAL, FOAM FIX, FEVICRYL போன்ற பல சர்வதேச புகழ்பெற்ற தயாரிப்புகளும் உள்ளடங்கும்.

Pidilite Industries நிறுவனம் பற்றி:
Pidilite Industries என்ற நிறுவனம் பசைகள் மற்றும் சீலண்டுகள், கட்டுமான இரசாயனங்கள், கைவினைப் பொருட்கள், DIY (Do-It-Yourself) தயாரிப்புகள் மற்றும் பொலிமர் இமல்ஷன் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. Pidilite இன் தயாரிப்பு கட்டமைப்பில் நிறப்பூச்சு இரசாயனங்கள், வாகன இரசாயனங்கள், கலை பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள், பராமரிப்பு இரசாயனங்கள், தொழில்துறை பசைகள், தொழில்துறை புடவை சாயம் மற்றும் சேதன நிறங்கள் ஆகியவை அடங்கும். இந்த தயாரிப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளால் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்புகளாகும்.
Pidilite நிறுவனத்தின் Fevicol வர்த்தக நாமம் இந்தியாவிலும் பல சர்வதேச சந்தைகளிலும் மிகவும் பிரபலமான நாமமாகும்,. மேலும் இது இந்தியாவில் மிகவும் நம்பகமான வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். MSeal, Fevikwik, Fevistik, Roff, Dr.Fixit, Fevicryl ஆகியவை Pidilite நிறுவனத்திற்கு சொந்தமான சில முக்கிய வர்த்தக நாமங்களாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT