144
பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.என்.எம். தாஹிர்பாஸியின் ஏற்பாட்டில் வாதுவ லயன்ஸ் கழகத்தினால் அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடாத்தப்பட்டது.
கல்லூரியில் இடம்பெற்ற இந்த கண் பரிசோதனை நிகழ்வில், துறைசார்ந்த சுகாதார பிரிவினர் கலந்துகொண்டு கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். லயன்ஸ் கழக பிரமுகர்கள் மற்றும் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் தாஹிர் பாஸியும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)