எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிசாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியை சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று (21) கருத்து வெளியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது