மழை தொடர்வதற்கான சாத்தியம் | தினகரன்

மழை தொடர்வதற்கான சாத்தியம்

நாடு முழுவதும்குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்றுடனான  நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கு அதிகரித்து வீசக்கூடும் என்பதோடு,  நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என்றும்எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் பதுளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு,  மேல்மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவுறுத்தியுள்ளது.

 


Add new comment

Or log in with...