2019 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு 41% பெண்கள் | தினகரன்


2019 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு 41% பெண்கள்

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 39,382 பெண்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், இது வெளிநாடு சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 41 சதவீதம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகளவான பெண்கள் குவைத்துக்கு சென்றுள்ளதாகவும், இவ்வாறு குவைத்துக்கு சென்றுள்ளவர்களில்  14,948 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியினுள்  20,601 பேர் குவைத்துக்கும், 19,026 பேர் கட்டாரிற்கும், 16,747 பேர் சவுதி அரேபியாவிற்கும் சென்றுள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 858 பெண்கள் இன்று (11) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...