Home » எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

- இன்று அதிகாலை 5.00 மணி முதல் அமுல்

by Prashahini
January 1, 2024 8:08 am 0 comment

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன.

இன்று (01) அதிகாலை 5.00 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக  பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிப்பு: அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 38 ரூபாவினால் அதிகரிப்பு: அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 29 ரூபாவினால் அதிகரிப்பு: அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் அதிகரிப்பு: அதன் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைப்பு:, அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

UPDATE: 

புத்தாண்டையிட்டு சில எரிபொருட்களின் விலைகளை குறைத்த சினோபெக்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளின்படி, சினோபெக் நிறுவனமும் இன்று (01) காலை முதல் எரிபொருள் விலைகளை திருத்தம் செய்திருந்தது.

எனினும் புத்தாண்டை முன்னிட்டு ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை 3 ரூபாவால் குறைத்து சலுகை வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 363
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 355

பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவற்றின் விலைகளின்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

சினோபெக் வெளியிட்ட இந்த புதிய விலைகள் அடுத்த எரிபொருள் விலை திருத்தம் வரை அமுலில் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT