கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம் | தினகரன்

கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்

கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்-Vavuniya Youth Fell From Train and Dead

வவுனியாவில் சம்பவம்

புகையிரதத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த  இளைஞர் ஒருவர், வவுனியா, தாண்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள  சாந்தசோலை சந்திக்கு அண்மையில் புகையிரத்தில் இருந்து குதித்ததோ அல்லது வீழ்ந்தோ மரணமடைந்துள்ளார்.

கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்-Vavuniya Youth Fell From Train and Dead

இன்று (03) பிற்பகல் 5.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தை சேர்ந்தவர் எனவும் அவரது பெயர் ஸ்டீபன் எனவும் அறிய முடிகிறது.

கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்-Vavuniya Youth Fell From Train and Dead

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு - யாழ் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் மரணம்-Vavuniya Youth Fell From Train and Dead

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Add new comment

Or log in with...