நுவரெலியா ஹோட்டல் பல்கனியிலிருந்து வீழ்ந்து சீனப் பெண் பலி | தினகரன்

நுவரெலியா ஹோட்டல் பல்கனியிலிருந்து வீழ்ந்து சீனப் பெண் பலி

நுவரெலியா ஹோட்டல் பல்கனியிலிருந்து வீழ்ந்து சீனப் பெண் பலி-Chinese Women Dies by Falling from Balcony

 

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த, வெளிநாட்டுப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நுவரெலியா, கிரேகெறி வாவிக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், அக்கட்டடத்தின் 3 ஆம் மாடியிலுள்ள மரத்தினாலான, உப்பரிகையில் (Balcony) நின்றிருந்த வேளையில், அது உடைந்து வீழ்ந்து பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவர், நுவரெலியா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவம், இன்று (23) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு, இதில் உயிரிழந்தவர், 34 வயதான சீன நாட்டைச்சேர்ந்தவர் என அவர் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...