அமெரிக்கா பகிரங்க டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.
அமெரிக்கா கிராண்ட்ஸ்லம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.
இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.
இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர்.
Add new comment