ஐ.தே. கட்சியின் உப தவிசாளராக மங்கள தெரிவு | தினகரன்

ஐ.தே. கட்சியின் உப தவிசாளராக மங்கள தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவார் என்றும் அவரது நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஸ)


Add new comment

Or log in with...