ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி | தினகரன்

ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் புஷ்ஷுக்கு ரத்தத்தில் பரவிய தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹொஸ்டன் நகரில் உள்ள மதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பின் ஜோர்ஜ் புஷ்ஷின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று திரும்பிய நிலையில் புஷ்ஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...