பெற்றோல் ரூபா 126; டீசல் ரூபா 100
பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்க, இலங்கையின் இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு (24) முதல் அமுலாகும் வகையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை ரூபா 9 இனாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை அதனால் ரூபா 5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெற்றோல் (ஒக்டேன் 92) லீட்டர் ஒன்றின் விலை ரூபா 126 ஆகவும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூபா 100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயினும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்விலை அதிகரிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கையை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை ரூபா 117 ஆகவும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூபா 95 ஆகவும் காணப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தால், கடந்த 2015 ஜனவரி 21ம் திகதி, பெட்ரோலின் விலை ரூபா 33 இனாலும், டீசலின் விலை ரூபா 16 இனாலும் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள விலை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment