விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண பந்தத்தில் இணைவு | தினகரன்

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண பந்தத்தில் இணைவு

 

கோலி - அனுஷ்கா. இத்தாலியில் திருமணம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு, பிரமாண்ட அலங்காரங்கள், பார்ட்டி என கோலாகலமாக முடிந்தது திருமணம். 

கோலி

2008-ம் ஆண்டு அனுஷ்கா ஷர்மாவின் முதல் படம் வெளியாகிறது. அதே வருடம்தான் விராட் கோலியும் தனது முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்குகிறார். ஒரே வருடத்தில் இன்னிங்ஸைத் தொடங்கியவர்கள், அனுஷ்கா படம் வெளியான நாளில் இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கியுள்ளனர். 

2013-ம் ஆண்டு ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் முதல்முறையாக ஒன்றாகத் தோன்றினார்கள். இந்த விளம்பரத்திலிருந்து இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி கேப்டனாக்கப்பட்டார். அப்போது ஹைதராபாத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியைக் காண வந்திருந்த அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி பேட்டை உயர்த்தி ஃப்ளையிங் கிஸ் அடித்தது எல்லாம் பாலிவுட்டை மிஞ்சும் லவ்ஸ்!

2015-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை அரை இறுதியில் மோசமாகத் தோற்றதற்கு 15 வீரர்களைத் தவிர்த்து அனுஷ்கா ஷர்மாவைக் கைகாட்டினார்கள் ரசிகர்கள். களத்தில் உணர்ச்சிவசப்படும் விராட், அமைதியாக இருந்தார். இதற்கிடையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கு அன்ஃபாலோ செய்யப்பட்டது, இருவருக்குமிடையேயான உறவு முறிந்தது என்ற விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என விளக்கமளிக்கப்பட்டது.

2016-ல், விராட் - அனுஷ்கா இருவரும் பொதுவெளியில் சகஜமாக கைகோத்து சுற்றினர். யுவராஜ் சிங் திருமணம், விருது வழங்கும் விழா எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் விராட் - அனுஷ்கா ஜோடியைப் பார்க்க முடிந்தது. 2016-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் தோல்வியடைந்தது. ஆனாலும், தொடர் நாயகன் விராட்தான். இந்த முறையும் அனுஷ்கா விமர்சிக்கப்பட, கொதித்தெழுந்தார் கோலி. `ஷேம்' என்ற ட்வீட் மூலம் ஒற்றை வார்த்தையில் விமர்சகர்களை விளாசினார். அதுதான் 2016-ம் ஆண்டின் மிகச்சிறந்த இந்திய ட்வீட்டாக இடம்பிடித்தது.


 

Shame on people for trolling @AnushkaSharmanon-stop. Have some compassion. She has always only given me positivity

'2017-ம் ஆண்டு புத்தாண்டை அனுஷ்காவுடன் கொண்டாடுகிறேன்' என்று வெளியிட்ட புகைப்படம், தெறி வைரல். 2017-ம் ஆண்டு ஜனவரியில் `விராட் கோலி-அனுஷ்கா திருமணம்!' என வதந்தி கிளம்பியது. ``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'' என்று ஆஃப் செய்தார் கோலி.


 

Today we have promised each other to be bound in love for ever. We are truly blessed to share the news with you.This beautiful day will be made more special with the love and support of our family of fans & well wishers. Thank you for being such an important part of our journey.

தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. இத்தாலிக்குக் கோலியின் நண்பர்களுக்கும் முக்கியப் பிரபலங்களுக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. `இந்த முறை திருமணம்தான்' என்று செய்திகள் வலம்வந்தன. டிசம்பர் 11-ம் தேதி மாலை 6 மணிக்கெல்லாம் அதிகாரபூர்வ தகவல்களுடன் கோலி - அனுஷ்கா திருமணப் படங்கள் வெளியாகின. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் கோலி!


 

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity

கோலியை விட 188 நாள்கள் வயதில் பெரியவர் அனுஷ்கா ஷர்மா! ‘அடுத்த சச்சின்’ என வர்ணிக்கப்படும் விராட், இல்லற வாழ்க்கையிலும் சச்சின் ஸ்டைலைப் பின்பற்றுகிறார். “திருமணமானவர்கள் க்ளப்பில் இணைந்ததற்கு வாழ்த்துகள்” என்கிறார் ரஹானே. சச்சின் வாழ்த்துகிறார். அனுஷ்கா ஷர்மா - விராட் கோலியின் திருமணத்தை ட்விட்டர் ‘விருஷ்கா திருமணம்' என்ற ஹேஷ்டேக்குடன் உலக அளவில் ட்ரெண்டாக்குகிறது.

 


Add new comment

Or log in with...