முறி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு | தினகரன்

முறி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

 

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியினால் அவ்வாணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆணைக்குழு கால எல்லை நாளைய தினம் (08) நிறைவடைவதாக இருந்த நிலையில் அதன் கால எல்லை மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...